கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா

" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா....


இந்தியாவின் எல்லைகளில் இருந்து பிரிக்கப்பட்டு ஸ்ரீலங்கவோடு சேர்க்கப்பட்டது கச்சத்தீவு. இங்குள்ள அந்தோணியார் ஆலய திருவிழா பிரசித்தி பெற்றது.  தமிழர்கள் அந்தோணியார்  திருவிழாவிற்கு வருடா வருடம் செல்வது  வழக்கம். கச்சத்தீவு செல்வதற்கு மாவட்ட ஆட்சியரிடம்  பதிவு செய்து கொண்டு படகில் செல்வர். இந்த திருவிழாவானது(06/03/2020 வெள்ளிக்கிழமை) நேற்று அருட்தந்தையர்கள் ஜெபம் நடத்தி கொடி ஏற்றி வைத்தார்கள். இன்று(07/03/2020 சனிக்கிழமை) இன்று திருவிழாவானது நடைபெறுகிறது. திருவிழா  இன்று மாலை கொடி இறக்கத்துடன் முடிவடைகிறது. திருவிழா  முடிந்தவுடன்இரவு12 மணிக்குள் தமிழர்கள் தமிழ் நாட்டிற்கும் ஸ்ரீலங்காவினர் ஸ்ரீலங்கா விற்கும் செல்ல வேண்டும். மேலும்  கொடியேற்றத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அருட்தந்தையர்களும், ஜெப குழுவினர்களும், வந்து திருவிழா ஏற்பாடுகளை செய்தனர்.  மேலும் இந்திய கடற்படையினரும், இலங்கை கடற்படையினரும் பாதுகாப்பிற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்பாடு செய்தனர். கடற்படையினர் படகில் பாதுகாப்பிற்காக ரோந்து பணியில் நான்கு நாட்களாக ஈடுபட்டு உள்ளனர்